Sunday, July 3, 2022

தொல்காப்பியம் உரைக்கின்ற பத்துப் பொருத்தம்

 பொருள்:-

488 பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
     
உருவு நிறுத்த காம வாயில்
     
நிறையே அருளே உணர்வொடு திருஎன
     
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
     

     மேல் ஒத்த கிழவனும் கிழத்தியும் என்றார்இஃது அவ்வொப்பின்
 
பாகுபாடு கூறுகின்றது.

     -ள் ஒத்த பிறப்பு முதலிய பத்துவகையினை உடைய; மேல்
 
நெறிப்படக்கூறிய ஒப்பினது பாகுபாடு என்றவாறு.

     பிறப்பு - குடிப்பிறத்தல்; குடிமை-அதற்குத்தக்க ஒழுக்கமுடைமை;
 
ஆண்மை-ஆள்வினை; ஆண்டு-பெண்மையும் ஆண்மையும் பிறக்கும்
 
பன்னீராண்டும் பதினாறாண்டும் ஆகிய பருவம்; உருவு-பெண்மைவடிவும்
 
ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்த வனப்பு; நிறுத்த காமவாயில்-
 
நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயிலாகிய அன்பு; நிறை - மறை பிறர்
 
அறியாமை நெஞ்சினை நிறுத்துதல்; அருள்-பிறர் வருத்தத்திற்குப் பரியும்
 
கருணை; உணர்வு-உலகியலால் செய்யத் தகுவது அறிதல்; திரு-செல்வம். 116

 

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணமென்ப"

இங்கு ஐயர் என்போர்  சான்றோரை(தமிழ்ப் பெரியோர்களைக் குறிக்கும்)  ஆற்றியப் பார்ப்பனர் கிடையாது. கரணம் என்பது திருமணத்தை குறிக்கும்.

 

இந்த சடங்கு மணமுறை முதலில் அரசகுடிகளுக்கும், வணிக குடிகளுக்கும், அறவோர்(அந்தணர்)  குடிகளுக்கும் பின்பு படிப்படியாக எல்லாக் குடிகளுக்குள்ளும் நுழைந்தது .

 

"மேலோர் மூவருக்கும் புணர்த்த கரணங்

கீழோர்க் காகிய காலமும் உண்டே" - தொல்காப்பியம்

 கற்பு மனத்தில் இன்று பொருத்தம் பார்ப்பது போல் அன்றும் பத்து பொருத்தங்களை பார்த்துள்ளனர்.

 

"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

 

பிறப்பு : ஒத்த குடியில் பிறத்தல்.

குடிமை : பிறந்த குடிக்குரிய ஒழுக்கம்

ஆண்மை : ஆண்மை என்பது இங்கு ஆண்தன்மையைக் குறிக்காது.   ஆளும் தன்மையைக் குறிக்கும். குடியாண்மை எனப்படும். இது பெண்களுக்கும் உரிய பண்பே.

ஆண்டு : ஆண் பருவமடையும் வயது 16, பெண் பருவமடையும் வயது 12 என இவ்வகையில் ஆணோடு பெண் ஒத்திருப்பது ஆண்டு ஒப்புமையாகும்.

உருவம் : உருவழகு.

நிறுத்த காமவாயில் : இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக இருத்தல் வேண்டும்

நிறை: ‘மறைபிறர் அறியாமை (மறை : இரகசியம்). மறையைப் பிறர் அறியாமல் காத்துக் கொள்ளும் அடக்கம்.

அருள் : எல்லா உயிர்க்கும் துன்பம் செய்யாத அருள் உடையராய் இருத்தல்

உணர்வு : உணர்வு என்பது அறிவுடைமை.  அதாவது,  உலக நடவடிக்கைகளில் செய்யத்தக்கவைகளை அறிதல்.

திரு : செல்வத்தன்மை (திருத்தகவு) இருக்கும் மனநிலையைக் குறிக்கும். ‘சிந்தையின் நிறைவே செல்வம்.



பிறப்பு
   - நற்குடியில்  பிறத்தல்
குடிமை   -  பிறந்த அக்குடியின் சிறப்புக்கேற்ற ஒழுக்கமுடைமை
ஆண்டு   - அகவை ஒப்புமை
உருவு   - உடல் தோற்றம்
நிறுத்த காம வாயில்   - உடற்கண் அமைந்த காம இன்பம் நுகர்வதற்கான  கூறுகள்
நிறை   - திருமணமானபின் மனத்தை ஒருவழி நிறுத்தவல்லதற் கட்டுப்பாடு
அருள்   -  பொதுவாக அருளுடையவராகத் திகழ்தல்
உணர்வு   -  மன உணர்ச்சி நிலைகள்
திரு   -  செல்வமுடைமை, செல்வர்போலும் மனமகிழ்ச்சியுடைமை உட்பட.மணமக்கள் இருவரிடமும் இவை அமைத்திருத்தலே மணமக்களுக்குரியஒப்புமையாகும். இவை இன்றையப் பார்வையில் மணமக்களுக்கான திருமணப் பொருத்தமாகக் கொள்ளப் படுகின்றன

மணமகன், மணமகளிடையே அமையக் கூடாத பொருந்தாக் குணங்கள் :-
நிம்பிரி, கொடுமை, வியப்ப்பொடு, புறமொழி,
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை,
இன்புறல், ஏழைமை, மறப்போடு ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர். ( தொல்.1216 )
நிம்பிரி என்பது அழுக்காறு,
கொடுமை என்பது அறனழியப் பிறறைச் சூழும் சூழ்ச்சி,
வியப்பு என்பது தம்மைப் பெரியாராக நினைத்தல்,
புறமொழி என்பது புறங்கூறுதல்,
வன்சொல் என்பது கடுஞ்சொல் கூறல்,

பொச்சாப்பு என்பது சோர்வு அல்லது மறதி அல்லது தம்மைக்  கடைப் பிடியாமை,
மடிமை என்பது முயற்சியின்மை,
குடிமை இன்புறல் என்பது நம் குலத்தினாலும், தம் குடிப்பிறப்பினாலும் தம்மைப்  பெரிதாக மதித்து இன்புறல்,
ஏழைமை   என்பது பேதைமை,
மறப்பு   என்பது யாதொன்றாயினும் கற்றதனையும், கேட்டதையும் மறத்தல்,
ஒப்புமை  என்பது ஆண்பாலாயினும், பெண்பாலாயினும் தான்

காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வார் என ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது உலகின்கட் கீழ்மக்கள் மாட்டும் கண்ணிலோர் மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்கு ஆகாது என
விலக்கப்பட்டது.

No comments:

Post a Comment