கீழடி அகழாய்வு: அறிவியல் பூர்வமான விமர்சன பார்வையில் - மிகைப்படுத்தப்பட்ட ஆரவாரமா அல்லது உண்மையான கண்டுபிடிப்பா?
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், கீழடியில் 2014 முதல் இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் (ASI) மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை (TNSDA) அகழாய்வு நடத்தியது.
கீழடி அகழாய்வு, 2013-14இல் தொல்லியல் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் வைகை ஆற்றுப் படுகை ஆய்வின் அடிப்படையில் தொடங்கியது. 2014 முதல் 2025 வரை ஒன்பது கட்ட அகழாய்வுகள் நடைபெற்று, 18,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்-பிராமி எழுத்து, செங்கல் கட்டுமானங்கள், மண் குழாய்கள், மற்றும் வர்த்தகப் பொருட்களை உள்ளடக்கியவை.
தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையில் 3 கரித்துண்டுகள் கிடைத்தது எனவும் அவற்றின் கார்பந்14 கரிமப் பகுப்பு அடிப்படையில்- கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களின் காலம் பொமு 6ம் நூற்றாண்டிலிருந்து பொஆ 12ம் நூற்றாண்டு வரை என்கிறது
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள், தன்மைகள் பிற தொல்லியல் தளங்களிலும் காணப்படுகின்றன. இவை அரசியல் நோக்கங்களுக்காக மிகைப்படுத்தப் பட்டவையாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
கீழடி அகழாய்வை அறிவியல் பூர்வமான விமர்சனங்கள், ஆதாரங்களின் பற்றாக்குறையை சுட்டினாலும், தமிழகத்தில் ஆளும் கட்சியும், மாநில அரசும் இதை அரசியல் அடையாளமாக்கி அரசியல் செய்கிறது. அகழாய்வு அறிக்கையில் ஓரிரு கருதுகோள்களை மிகைப்படுத்தி, ஆரவாரமான பரப்புதலும், அதை வைத்து இனவாதமும் வெறுப்பு தூண்டலும் தொடர்கிறது.
கீழடி அகழாய்வை இரண்டு (2013 - 15) ஆண்டுகள் செய்த தொல்லியலாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கை வெளியீட்டில் தாமதம் 2023 வரை என்பதும், அவரே 2018ல் கேரளா பல்கலைக் கழக ஆய்வேட்டில் தந்த முடிவுகளிற்கு மாறாக உள்ளதும், இவர் 2023 அறிக்கை கருதுகோள்களின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
தற்போது ஆரவாரமாக பரப்பும் கூற்றுகள் அறிவியல் ரீதியாக எந்த அளவு நம்பகத்தன்மை கொண்டவை? மேலும், இவை அரசியல் நோக்கங்களுக்காக மிகைப்படுத்தப்பட்டவையா? இந்தக் கேள்விகளை ஆராய, அறிவியல் ஆதாரங்கள் மற்றும் விமர்சனங்களை பரிசீலிக்கவே இந்த நூல் ஆகும்
No comments:
Post a Comment